முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி பலி

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      இந்தியா
Kashmir-4 2025-04-22

Source: provided

கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில்  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்த போது, பிற்பகல் 3 மணியளவில் பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர். இதில், 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.  

 இந்த நிலையில், திருமணம் ஆகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்ததை கடற்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

வினய் நர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் சேர்ந்துள்ளார். கேரளத்தின் கொச்சியில் பணியாற்றி வந்த நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அவருக்கு திருமணமாகி ஏப்ரல் 19 ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு விடுமுறைக்காக காஷ்மீரில் இருந்துள்ளார்.

வினய் நர்வால் திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வினய் நர்வால் இறந்த செய்தி இடியாக வந்து சேர்ந்ததாக அவரது பக்கத்து வீட்டார் நரேஷ் பன்சால் தெரிவித்துள்ளார்.

நர்வால் இறப்பு குடும்பத்தினர், சமூகம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடு நல்ல ஒரு இளம் அதிகாரியை இழந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தங்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து