முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தாக்குதலில் தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      உலகம்
Pak 2023 07-18

Source: provided

இஸ்லாமாபாத் : காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது: மக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். இந்துத்துவ சக்திகள் மக்களை சுரண்டி வருகின்றன. சிறுபான்மையினரை அடக்குகிறார்கள். கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் சுரண்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்தச் சம்பவத்தில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. 

எந்தச் சூழலிலும் நாங்கள் எங்கும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. மேலும், எந்த மோதலிலும் அப்பாவி மக்கள் இலக்காகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாகிஸ்தானுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்த இந்தியா உடந்தையாக இருப்பதை பல சந்தர்ப்பங்களில் ஆதாரத்துடன் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து