எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கைவினை திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை
எதிர்ப்பது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கைவினை கலைஞர்கள்...
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கைவினைத் திட்டத்தை நேற்று (ஏப்.19) தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பா.ஜ.க. அரசு கடந்த 2023-ம் ஆண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? விஸ்வகர்மா திட்டம். 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி, மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள்.
நிபந்தனை இருந்தது...
நம்மை பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம் அப்படியான திட்டம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் திட்டத்தின்கீழ் ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்து கொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி நாம் கடுமையாக எதிர்த்தோம்.
சாதிய வேறுபாடுகள்...
அதுமட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. மத்திய பா.ஜ.க. அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. குடும்பத் தொழிலில் பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்க கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. அதுவும், சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
தமிழ்நாடு அனுமதிக்குமா?
அதுவும், 1950-களிலேயே குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துக் களம் கண்ட தமிழ்நாடு இதை அனுமதிக்குமா? அந்த உணர்வோடுதான், தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் . விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 35-ஆக உயர்த்தவேண்டும். கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும்.
ஏற்றுக்கொள்ள மறுப்பு...
ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழக அரசு செயல்படுத்தாது என்று மத்தியில் இருக்கக்கூடிய எம்.எஸ்.எம்.இ. துறையின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
25 வகை தொழில்கள்...
அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது. ஆனால், கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுத் திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
ரூ.3 லட்சம் வரை மானியம்...
கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35-ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு செல்கின்ற வயதில், குடும்பத் தொழிலை பார்த்தால் போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். இந்தத் திட்டத்தில், 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்கர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிடத்தக்க பங்கு...
தமிழ்நாடு இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சொன்னால், பெரிய நிறுவனங்களால் மட்டுமே இந்த வளர்ச்சி வந்துவிடவில்லை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாலும்தான் இந்த வளர்ச்சியை நாம் சாத்தியமாக்கி இருக்கிறோம். இந்தத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்தத் துறையை சிறப்பாக வளர்த்தெடுத்துக் கொண்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். அவை பெருந்தொழில்களுக்கு துணையாக இருந்து நாட்டின் ‘இன்க்ளூசிவ்’ மற்றும் ‘ஆல்-ரவுண்ட்’ சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது. உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால், மக்கள் வேலை தேடி தொலைதூரங்களுக்கு இடம் பெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு 3-ம் இடம்...
எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-வது இடத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 33 லட்சம் எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் இது 9.4 விழுக்காடு. அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முயற்சிகளை பரவலாக நாம் தொடங்கி வருகிறோம். அந்த வகையில்தான் கலைஞர் கைவினைத் திட்டமும் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்து, அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது. ஆனால், கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுத் திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 9 hours ago |
-
மகளிர் உரிமை தொகை பெற ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்
28 Apr 2025புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-04-2025
28 Apr 2025 -
4-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சாடல்
28 Apr 2025ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பியதாக வட கொரியா அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
-
மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : தி.மு.க. ஆட்சியில் மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை: பாக். ராணுவத்தில் இருந்து 1,200 வீரர்கள் வெளியேறினர்
28 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை காரணமாக ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
-
வான்வெளியை பயன்படுத்தத் தடை: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு
28 Apr 2025லாகூர் : பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ
-
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
28 Apr 2025சென்னை, சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது. மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் &n
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காாசவில் 27 பேர் உயிரிழப்பு
28 Apr 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
-
வல்லமை விமர்சனம்
28 Apr 2025கிராமத்திலிருந்து சென்னைக்கு மகளுடன் வருகிறார் மிரேம்ஜி.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்: கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
28 Apr 2025கோவை, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’
28 Apr 2025ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது என நானி உறுதியளித்துள்ளார்.
-
ஒய்.ஜி.மகேந்திரனின் ‘டார்க் பேஸ்’
28 Apr 2025ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.
-
வெளிமைதானங்களில் 6 தொடர் வெற்றி: ஆர்.சி.பி. அணி சாதனை
28 Apr 2025புதுடெல்லி : ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.
-
போர் பதற்றத்தால் காஷ்மீரில் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்
28 Apr 2025புதுடெல்லி : பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
-
தமிழக சட்டசபையில் வானதி - அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம்
28 Apr 2025சென்னை : தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம் நடந்தது.
-
மே 8- முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் உக்ரைன் போர் தற்காலிக நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
சபாஷ்.. சரியான போட்டி..: அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை
28 Apr 2025சென்னை, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வானதி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் இடையே விவாதம் நடந்தது.
-
நாங்குநேரி விபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டால
-
பஹல்காமில் தீவிரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் ஆதரவாளர்கள்
28 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் தாக்கு தல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூரில் உள்ள காஷ்மீர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் - ஓஜிடபிள்யூ) உ
-
அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 30 பேர் பலி
28 Apr 2025ஆப்பிரிக்கா : ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்
-
புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
28 Apr 2025புதுச்சேரி, விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் தாணு
28 Apr 2025கடந்த காலங்களில் வெற்றி பெற்ற பல படங்கள் மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது.