முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் துறைமுக விபத்து: உயிரழப்பு 40 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      உலகம்
IRAN 2025-04-26

Source: provided

தெஹ்ரான் : ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு இந்த துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பலர் நெருப்பில் சிக்கிக்கொண்டனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் அடுத்தடுத்து பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. ஆனால் இதனை ஈரான் ராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து