Idhayam Matrimony

ஒய்.ஜி.மகேந்திரனின் ‘டார்க் பேஸ்’

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      சினிமா
Dark-Base 2025-04-28

Source: provided

ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. The Chosen One நிறுவனம் சார்பில் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ள இந்த இணையத் தொடரை அறிமுக இயக்குநர் சரண்பிரகாஷ் இயக்கி இசையமைத்துள்ளார். 

பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞராக முதன்மை கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார், அவரது மகள் ஒய்.ஜி.எம். மதுவந்தி பெண்கள் விடுதியின் காப்பாளராக நடித்திருக்கிறார். இவர்களுடன் KPY ராஜவேல், செளமியா, தயாரிப்பாளர் அபுகரீம் இஸ்மாயில், யெஸ்வந்த், சக்தி, சுனில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டடர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் லிங்குசாமி கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். ‘டார்க் ஃபேஸ்’ இணையத் தொடர் குறித்து இதன் இயக்குநர் சரண்பிரகாஷ் பேசுகையில், “கற்பழிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்படுகிறார். அவர் கற்பழித்ததாக சொல்லப்படும் பெண் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து வாதாடும் மூத்த வழக்கறிஞர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். இதனால், அவர் கொண்டாடப்படுகிறார். அவருக்கு பல விருதுகளும் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு சில தினங்கள் முன்பு தனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை கைதி தெரிவிக்க, அவரது ஆசைப்படி மூத்த வழக்கறிஞர் அவரை சந்திக்கிறார். அப்போது கைதி கூறும் சில விசயங்களால், குற்றமற்ற ஒருவருக்கு தான் தண்டனை வாங்கிக் கொடுத்ததை உணரும் வழக்கறிஞர், காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பை தவிர்த்துவிட்டு, கைதியின் கண்ணோட்டத்தில் வழக்கை பார்க்கும் போது, கற்பழிப்பு வழக்கு மற்றும் தற்கொலைக்கு பின்னால் மிகப்பெரிய சதித்திட்டமும், மர்மமும் நிறைந்திருப்பதை உணர்கிறார். அது என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது தான் மொத்த கதை என்றார். 7 எப்பிசோட்களும் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தவையாக இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து