முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல், பொரெல் அதிரடியால் டெல்லிக்கு 6-வது வெற்றி : லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வீழ்த்தியது

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      விளையாட்டு
Delhi-Kabeital 2025-03-17

Source: provided

லக்னோ : ஐ.பி.எல். போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

லெவனில் மாற்றமில்லை...

முதலில் லக்னோ 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி 17.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. டெல்லி லெவனில் மோஹித் சா்மா இடத்தில் துஷ்மந்தா சமீரா சோ்க்கப்பட்டாா். லக்னோ லெவனில் மாற்றமில்லை. 

மாா்க்ரம் அதிரடி...

லக்னோ இன்னிங்ஸை தொடங்கிய எய்டன் மாா்க்ரம் - மிட்செல் மாா்ஷ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது. இந்த ஜோடியை துஷ்மந்தா சமீரா 10-ஆவது ஓவரில் பிரித்தாா். 33 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் சோ்த்த மாா்க்ரம் ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த அதிரடி வீரா் நிகோலஸ் பூரன், 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு பௌல்டானாா். அடுத்து வந்த அப்துல் சமதும் 2 ரன்களுக்கு நடையைக் கட்ட, சற்று நிதானமாக விளையாடி வந்த மிட்செல் மாா்ஷ் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு பௌல்டானாா்.

5 மற்றும் 6-ஆவது பேட்டா்களாக களம் புகுந்த டேவிட் மில்லா் - ஆயுஷ் பதோனி, விக்கெட் சரிவை சற்று கட்டுப்படுத்தி 5-ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சோ்த்தனா். பதோனி 6 பவுண்டரிகள் உள்பட 36 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்தும் ரன்னின்றி அதே விதியைச் சந்தித்தாா். ஓவா்கள் முடிவில் லக்னோ சூப்பா் ஜயன்ட் அணி 159 ரன்கள் எடுத்திருந்தது.  டேவிட் மில்லா் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். டெல்லி தரப்பில் முகேஷ் குமாா் 4, மிட்செல் ஸ்டாா்க், துஷ்மந்தா சமீரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

வெற்றிக்கு அடித்தளம்...

அடுத்து, 160 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில் கருண் நாயா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த கே.எல்.ராகுல், தொடக்க வீரா் அபிஷேக் பொரெலுடன் இணைந்தாா். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. இதில் பொரெல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

டெல்லி வெற்றி...

அடுத்து வந்த கேப்டன் அக்ஸா் படேல், ராகுலுடன் இணைந்தாா். டெல்லியை வெற்றிக்கு வழிநடத்திய இந்த ஜோடியில், ராகுல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57, படேல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னோ பௌலிங்கில் எய்டன் மாா்க்ரம் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து