முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 2-வது நாளாக திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Tiruchendur 2024-08-25

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அமாவாசை தினமாகும். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளம் வரை கரையில் இருந்து கடல் 80 அடி உள்வாங்கி உள்ளது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

கடல் உள்வாங்கி உள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க சற்று சிரமம் அடைந்துள்ளனர். மேலும் ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து