எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா
'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும்: 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேச்சு!
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்று 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான 'திருநாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 'திருநாள்' படத்தின் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது ''இன்று 'திருநாள்' படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். நான் 'யான்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப்பட்ட சட்டை போல 'டெய்லர் மேட்' படமாக இருக்கும் என்றார்.முதல் பாதிகதையைக் கேட்டவுடனேயே பிடித்துவிட்டது. அப்போதே என் உள்ளுனர்வு சொன்னது இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று. எல்லாமே நல்லபடியாக அமைந்தது. நல்ல படக்குழு நல்ல உள்ளுணர்வோடு சந்தோஷமாகவே நடித்தேன். என் ஒவ்வொரு படத்தையும் நன்றாக வரவேண்டும் என்று நினைத்துதான் செய்கிறேன்.
உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துதான் செய்கிறோம். இந்தப் படத்திலும் அப்படித்தான் நினைத்து நடித்தேன். கும்பகோணத்தில் 45 நாட்களிலேயே முழுப்படத்தையும் இயக்குநர் முடித்துவிட்டார். டப்பிங்கில் பார்த்தபோது வேண்டாத காட்சிகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு எடிட்டிங் சென்சோடு படத்தை எடுத்திருந்தார்.
இயக்குநர் எடிட்டிங் சென்ஸ் உள்ளவர் மட்டுமல்ல மனித உணர்வுகளையும் புரிந்தவரும்கூட. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ரசிகன் நான் இதில் அவர் நன்றாக ஒளிப்பதிவு செய்திருந்தார். இசையமைப்பாளர் ஸ்ரீயுடன் 'ஈ' ,'தெனாவெட்டு' க்குப்பிறகு எனக்கு இது மூன்றாவது படம். இனிமையான பாடல்களைக் கொடுத்திருந்தார். வீட்டில், மனைவி, அம்மா எல்லாருக்கும் பிடித்த பாடல்கள். நல்ல படத்துக்கு, நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்பேன். அப்படி அமைந்த படம் இது.
பாபி மாஸ்டருடன்'தெனாவெட்டு' க்குப்பிறகு இதில் சேர்ந்து பணியாற்றினேன். படம் பார்த்துவிட்டு கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூரிலிருந்து எல்லாம் நிறையபேர் போன் செய்தார்கள். எல்லாருக்கும் இதில் என் தோற்றம் பிடித்தது. இப்படி ஊர்ப்பகுதி மக்களுக்குப் பிடித்த படமாகவும் அமைந்தது மகிழ்ச்சி.நயன்தாராவுடன் நடித்தது எல்லாருக்கும் பிடித்து இருந்தது.
பொருத்தமான ஜோடி என்கிறார்கள். நயன்தாராவுடன் நடித்த போது நயன் இயர்ஸுக்குபிறகு நயனுடன் நடிப்பதாக அவருடன் கலாய்ப்பேன் அவர் தொழிலில் சரியாக இருப்பவர். தயாரிப்பாளர் செந்தில் குமார் சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனியில் ஒரு தூண் போன்றவர். அவர் தயாரிப்பில் 'திருநாளு'க்குப் பிறகு அடுத்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த வெற்றி எதிர்காலத்தில் தரமான நல்ல படங்கள் தரவேண்டிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது ''என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது"'திருநாளு'க்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி .நாயகன் ஜீவா சார் 63 நாட்களில் ஒரு நாளும் முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தார். நயன்தாரா நன்றாக நடித்திருந்தார். எனக்கு படப்பிடிப்பின் போது . 'திருநாள்' படத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. அப்போது நயன்தாரா கேட்பார் 'என்னராம்நாத் உங்களுக்கு திருநாள் படம் தவிர வேறு எதுவுமே தெரியாதா?' என்று கிண்டல் செய்வார். 'திருநாள்' படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ்நாடு கேரளா, கர்நாடகா ரசிகர்களுக்கும் ஒத்துழைத்த படக்குழுவினருக்கும் நன்றி''என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது, "வாய்ப்பு கொடுத்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. இப்படி ஒரு பெரிய படத்தில் வேறு யாராவது பெரிய இசையமைப்பாளரைத் தேடிப் போயிருக்கலாம். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இதுவரை குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்றிருந்த இருந்த என் பெயரை மெலடிஇசையமைப்பாளர் என மாற்றியிருக்கிறது இந்தப்படம். நான் சாதாரணமாக நினைத்த 'பங்காளி' பாடல் பாபி மாஸ்டரின் அற்புதமான நடனத்தால் பெரிய அளவுக்கு மாறிவிட்டது. 'பழையசோறு பச்ச மிளகா' பாடல்மெட்டு சாதாரணமானதுதான்.
ஆனால் வரிகளால் நல்ல பாடலாகி வெற்றி பெற்று இருக்கிறது.''என்றார். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, நடன இயக்குநர் பாபி,பாடலாசிரியர் ஜீவன் மயில், ஜீவாவின் அடுத்த படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' இயக்கவுள்ள இயக்குநர் ஜே.எம். அருண் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-04-2025
10 Apr 2025 -
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு
10 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.
-
நிதி நிறுவன பெயர்களில் மோசடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
10 Apr 2025சென்னை, நிதி நிறுவனங்களில் மோசடி தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
-
மாவோயிஸ்ட் நடமாட்டம்..? 3 மாநில எல்லையில் ரோந்து பணி தீவிரம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் அடுத்து ரோந்து பணி தீவிரமாக உள்ளது.
-
வங்கக் கடலில் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கும்: ஆய்வு மையம்
10 Apr 2025சென்னை, வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண
-
'நீட்' விலக்கு தொடர்பான வழக்கிலும் இது தொடரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
10 Apr 2025சென்னை, தி.மு.க. அரசு பெற்றுத்தரும் தீர்ப்புகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை.
-
காகிதமில்லா சட்டசபையாக புதுச்சேரி அறிவிப்பு
10 Apr 2025புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
-
சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Apr 2025சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: மாஞ்சோலையில் அதிகாரிகள் குழு ஆய்வு
10 Apr 2025நெல்லை, மாஞ்சோலையில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
-
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
10 Apr 2025மேட்டூர், டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வரும் ஜூன் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்ம
-
மாணவியை வெளியே உட்கார வைத்த விவகாரம் கோவை தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்
10 Apr 2025கோவை, பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்
-
யேமன் நாட்டு தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு
10 Apr 2025யேமன்: சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
-
பணிநீக்க விவகாரம்: மேற்குவங்காளத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
10 Apr 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்வு: அமித்ஷா இன்று ஆலோசனை
10 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
-
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்கள் அல்ல: மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
10 Apr 2025மும்பை, மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்களாக கருத முடியாது என, மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ஏன்? மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
10 Apr 2025சென்னை, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
10 Apr 2025புதுடெல்லி, மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போல
-
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்
10 Apr 2025டெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐ.பி.எல். தொடரில் தொடரும் சாய் சுதர்சனின் பல சாதனைகள்
10 Apr 2025அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழக வீரர்...
-
கோடை கால மின் தேவை:கூடுதல் மின்சாரம் கொள்முதல்
10 Apr 2025மதுரை: கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சச்சினுக்கு பிறகு அதிசய வீரர்:பிரியன்ஷ் ஆர்யாவுக்கு சித்து பாராட்டு
10 Apr 2025மும்பை: சச்சினுக்கு பிறகு, அவர் ஒரு அதிசய திறமை கொண்ட வீரர் என்று பிரியன்ஷ் ஆர்யா வுக்கு சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கோவை பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
10 Apr 2025கோவை, மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின்துறை அமைச்சர் செ
-
போப் பிரான்சிசை சந்தித்து நலம் விசாரித்த இங்கி. மன்னர் சார்லஸ்
10 Apr 2025ரோம்: போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர்