முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் பயன்படுத்துவதால் அமோனியம் நைட்ரேட்டுக்கு கட்டுப்பாடு

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை ​-18 - மும்பை தீவிரவாத தாக்குதலில் அம்மோனியம் நைட்ரேட் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளதால் அந்த ரசாயன பொருளுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மும்பையில் கடந்த 13 ம் தேதி ஜாவேரி பஜார், தாதர், ஓபரா ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் வெடித்த வெடி குண்டுகளில்  அம்மோனியம் நைட்ரேட்டுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது  தடயவியல் நிபுணர்களின் கண்டுபிடிப்பு.

எனவே இந்த அம்மோனியம் நைட்ரேட் தீவிரவாதிகளின் கைகளுக்கு  செல்வதை தடுக்கும் வகையில் இந்த ரசாயன பொருளுக்கு  கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரசாயன பொருள் விற்பனையை கட்டுப்படுத்த தகுந்த விதிமுறைகளை கொண்டு வர மத்திய ரசாயன துறை தீவிர பரிசீலனை  செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்