முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை காட்டிக் கொடுத்தார் ஜவாஹிரி

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ. - 10 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் ஜவாஹிரிதான் என்பது தெரியவந்துள்ளது. பின்லேடன் கடந்த மே மாதம் 2 ம் தேதி பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் இருந்த வீட்டில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கு மேலாக பதுங்கியிருந்த இவரது மறைவிடத்தை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது ஜவாஹிரி அனுப்பிய கூரியர் தகவல்கள்தான் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை கமாண்டோ பாரர் தெரிவித்துள்ளார்.  பின்லேடனை கொலை செய்வதற்கு வீட்டிற்குள் நுழைந்த 9 கமாண்டோக்களில் பாரரும் ஒருவர். இவர் எழுதிய புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது புத்தகத்தில் பாரர் எழுதியிருப்பதாவது, பின்லேடனை ரசிகர்கள் கொன்று விடுவார்கள் என்று ஜவாஹிரி எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு இருந்த அடிசன்ஸ் நோய் காரணமாக பின்லேடன் இறந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது. கடைசியாக கொரியர் தபால்களை அதிகம் அனுப்பி சி.ஐ.ஏ. கவனத்தை ஈர்த்து அதன் மூலம் பின்லேடனுக்கு முடிவு கட்டி தலைமை பதவியை கைப்பற்றியுள்ளார் ஜவாஹிரி என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். பாரர் எழுதிய 225 பக்க புத்தகத்தில் லேடன் மீது நடந்த தாக்குதல் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago