முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி இழுபறி: சோனியாவுடன் பேச சரத்பவார் முடிவு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.20 - மராட்டிய சட்டசபை தேர்தலில் கூட்டனியிலும், தொகுதி பங்கீடு இஅழுபறி நிலையில் உள்ளது.

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் காங்கிரசை சேர்ந்த பிரிதிவிராஜ் சமான் முதல் மந்திராயகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல் மந்திரியாகவும் இருக்கிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது. தொகு பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்திலில் தேசியவாத காங்கிரஸ 114 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. காங்கிரஸ் 174 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்த தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி காங்கிரசுக்கு இணையாக சரிபாதி தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்தது. எனவே தங்குக்கு 144 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பேச்சு வார்த்தையின் போது தெரிவித்தது. இதை ஏற்க காங்கிரஸ் மறுத்து விட்டது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட விகிதாச்சார அடிப்படையில் தான் இப்போதும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தனது தொகுதி பங்கீடு முடிவில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

இதில் அடுத்தக்கட்டமாக டெல்லியில் சோனியாவை சந்தித்து பேச சரத்பவார் திட்டமிட்டுள்ளார். முன்னதாக முதல்- மந்திரி பிரிதிவிராஜ் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சு நடத்தி நிலைமையை எடுத்துக் கூறுகிறார்கள். அதன் பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சரத்பவார் சந்தித்து பேசுகிறார். இறுதியாக சோனியாவை சரத்பவார் சந்திப்பார் என்று தெரிகிறது.

துணை முதல் - மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவார் கூறுகையில், கடந்த தேர்தலில் 114 தொகுதிகளை கைப்பற்றினோம். இருந்த போதும் முதல் - மந்திரி பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தோம். முன்பு செய்த இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். மொத்தம் உளஅள தொகுதிகளை சமமாக பங்கீட்டு கொள்ளலாம் என்ற முடிவை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது. இதில் சமரசத்துக்கு இடம் இல்லை என்றார்.

இதற்கிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தயாரித்து வருகிறது. இதனால் மராட்டிய தேர்தலில் பரபரப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்