முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்ததும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

ஆனால், இந்த முறை காந்தியின் 150வது பிறந்ததின விழாவை கொண்டாடும் வகையில், காலாண்டு விடுமுறை நாட்களில் (செப்.24 முதல் அக். 2 வரை) காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை நடத்தும்படி உத்தரவிட்டிருப்பதாகவும், அதனால் காலாண்டு விடுமுறை ரத்து எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. 

இந்நிலையில், காலாண்டு விடுமுறை ரத்து தொடர்பான தகவலை பள்ளிக்கல்வித் துறை மறுத்துள்ளது. ஏற்கனவே அறிவித்த காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறி உள்ளது.

அதேசமயம், காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம். அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து