முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் கோவிலில் முதல்வர் எடப்பாடி சாமி தரிசனம்

வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் நேற்று காலை கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் 30–ந் தேதி, 31–ந் தேதி (புதன், வியாழக்கிழமைகளில்) பிரச்சாரம் மேற்கொண்டார் . இரண்டாம் நாளான நேற்று (31–ந் தேதி) அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ரங்கா, ரங்கா கோபுரம் நுழைவு வாயிலில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், நந்து பட்டர், கோவில் அறங்காவல் குழுவினர் சார்பில் தமிழக முதல்வருக்கு மேள தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் கோவில் யானை ஆண்டாளுக்கு ஆப்பிள், முலாம் பழங்களை வழங்கி, யானையிடம் முதல்வர் ஆசி பெற்றார்.

பிறகு கருடாழ்வார், மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, உடையவர் சன்னதி ஆகிய இடங்களில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோயில் சார்பில் முதல்வருக்கு மரியாதை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெல்லமண்டி என். நடராஜன், எஸ்.வளர்மதி, எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், சேவூர் ராமசந்திரன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், மாநில அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் ஜி.கார்த்திகேயன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து