முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் இறந்துவிட்டதாக வதந்தி: நடிகை ஆவேசம்

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

அரியானாவை சேர்ந்த நடிகை சப்னா சவுத்ரி, விபத்தில் இறந்துவிட்டதாக வெளியான வதந்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அரியானா மாநிலம் சிர்சா அருகே நடந்த சாலை விபத்தில் நடிகையும், நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதனால், சப்னாவின் ரசிகர்களும், நெருங்கிய வட்டாரங்களும் அதிர்ச்சியடைந்தன. சில மணி நேரங்களில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் சப்னாவின் பேட்டி வெளியானதும், அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

 

இதுகுறித்து, சப்னா கூறுகையில் நான் இறந்துவிட்டதாக வதந்தி பரவியதும், எனது குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும், ரசிகர்களும் தொடர்ந்து என்னை செல்போனில் அழைத்தவண்ணம் இருந்தனர். இந்த வதந்தியை கேட்ட பின்னர், என் குடும்பத்தினர் மிகவும் வருத்தமடைந்தனர். இதனை எப்படி சமாளிப்பது என்றுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. எதற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தவறான புரிதலின் காரணமாக இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனரா? என்பதும் தெரியவில்லை’ என்று ஆவேசமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து