முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுதமை பாராட்டிய ஆர்யா

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      சினிமா
Arya 2025-02-24

Source: provided

லப்பர் பந்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிச்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிக்கும் படம் மிஸ்டர் எக்ஸ்.  எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா,  அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,  காளி  வெங்கட்  மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது,  கவுதம் கார்த்திக் ரொம்பவே கூலான, அதேசமயம் ஒரு செக்ஸியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷான ஒரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார் என்றார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது,  இந்த படம் எஃப்ஐஆர்-ஐ விட ரொம்பவே கடினமான ஒரு படம் தான். விஎஃப்எக்ஸ் காட்சிகள் இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும். இன்று நான் இந்த இடத்தில் ஒரு இயக்குநராக நிற்கிறேன் என்றால் அதற்கு என் மனைவியின் தொடர்ந்த 14 வருட முழு ஆதரவு தான் காரணம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து