எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித் எச்.வினோத் போனிகபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்படம் இவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படைப்பாகும். இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மக்களுக்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். கதை: இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு தணியார் வங்கியின் சென்னை கிளை அலுவலத்தை கொள்ளையர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த வங்கியையும், அங்கு இருக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை காவல் துறை அதிகாரியான சமுத்திரகனி ஏற்கிறார். அவருக்கு சவால் விடும் வகையில் அஜித் குமாரின் செயல் பாடுகள் இருக்கிறது. அந்த வங்கி எதற்காக கொள்ளையடிக்கப்படுகிறது? வங்கியிலுள்ள பணம் மீட்கப்பட்டதா? அஜித் குழுவினர் என்ன ஆனார்கள் என்பதே துணிவு படத்தின் கதை.
பணத்திற்காக ஒவ்வொரு ஏழை மக்கள் எப்படி பாடுபடுகிறார்கள். ஆனால் பணம் படைத்தவன் என்னென்ன கோல் மால் செய்கிறான். மக்கள் பணம் எப்படி வங்கிகளால் சுரண்டப்படுகிறது? மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? என்பதை, அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார் அஜித். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. அதே போல் ஆக்சனில் அசத்தியிருக்கிறார் மஞ்சு வாரியார். ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் முன்பு நிறுத்தி பரபரப்பான திரைக்கதையில் பட்டையை கிளப்பி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |