எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
1970 மற்றும் 80-களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக் கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் ரத்னம். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குனராக இருந்திருக்கிறார். இறுதியாக 1992-ம் ஆண்டு வெளியான பாண்டியன் திரைப்படம் வரையில் அவர் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1200-க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார் ஜூடோ ரத்னம்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த பேசும் போது, ஜூடோ ரத்னத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணியை உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்னம். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |