எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி- குண்டாறு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததைப் போல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அவர் மட்டுமே இந்தத் திட்டத்தை செய்யவில்லை. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து சிந்தித்தவர் கருணாநிதி தான். அதற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கருணாநிதி.
அந்த கதவணையைக் கட்டியது நான் தான். 2008-ம் ஆண்டு கருணாநிதி இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். 2009-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணிக்கு ரூ.177 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |