எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்திப்பதற்காக மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்திற்கு, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று காரில், நேரில் சென்றார்.
அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, டெல்லி மந்திரி அதிஷி மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் சென்றனர். அவர்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன்பின்பு, சரத்பவாருடனான சந்திப்பு நடந்தது. சந்திப்புக்கு பின் கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டம் ராஜ்யசபையில் தோல்வியடைய செய்யும் வகையில், எங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என சரத் பவார்ஜி உறுதி கூறியுள்ளார்.
பா.ஜ.க. அல்லாத அனைத்து கட்சிகளிடம் இருந்தும் ஆதரவை பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்திப்பதற்காக நாளை நேரம் கேட்க இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |