எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு 3 வருடத்திற்கு தடையில்லா சான்று வழங்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்த ராகுல், புதிதாக சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்ததுடன், ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து இருந்தது.
இந்த நிலையில், அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஆனால் அவர் கேட்ட 10 வருடங்களுக்கு அல்லாமல் 3 வருடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |