முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்க சட்டம்: கபில் சிபல் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே.27 - கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்த வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்திற்குள் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் ரசித்து பார்க்கும் கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு சூதாட்டத்தில் பணம் கட்டப்படுகிறது. இதனால் போட்டி முடிவு மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த புதிய சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு அவசர சட்டம் எதுவும் பிறப்பிக்கப்படமாட்டது மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இந்த புதிய சட்டம் இயற்றுவதற்கு முன்பு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உரிமையாளர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். பாராளுமன்றத்தில் இந்த புதிய சட்டம் எந்தவித தடங்கலும் இல்லாமல் நிறைவேறுவதற்காக இந்த கலந்தாலோசனையை நடத்தப்படும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். கடந்த 1990-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியபோதே கிரிக்கெட் சூதாட்டம் தொடங்கிவிட்டது. அதனால் அப்போதே இந்த சட்டத்தை இயற்றிருக்க வேண்டும். சட்டம் இயற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். கிரிக்கெட் மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளிலும் சூதாட்டத்தை தடுக்கும் வகையில் இந்த புதிய சட்டம் இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்