முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி:உலகக் கோப்பையை ஆஸி. அணி கைப்பற்றியது இந்திய அணி போராடி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      விளையாட்டு
10

Source: provided

அகமதாபாத்:6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் அந்த அணிக்கு ரூ. 33.18 கோடி பரிசு கிடைத்துள்ளது. 

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது.  முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய சொல்லி பணித்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கில், 4 ரன்களில் முதலில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரோகித் சர்மா. 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவரும் அவுட் ஆனார். ஹெட் அபார கேட்ச் பிடித்து ரோகித்தை வெளியேற்றினார். அதை தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயரும், 4 ரன்களில் அவுட் ஆனார்.

3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தனர். கோலி, 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் விக்கெட்டை இழந்த விதம் துரதிருஷ்டவசமானது. பின்னர் வந்த ஜடேஜா, 14 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவர் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து ஷமி மற்றும் பும்ரா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. 

சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு பந்தை மிகவும் நிதானமாக வீசி இருந்தனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி. முதல் முறையாக இந்த தொடரில் ஆல் அவுட் ஆகியுள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுக்க வேண்டும். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் சுதாரித்து கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடினர். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு ரூ. 33. 18 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு ரூ. 16.59 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் எல்லாம் தொடர் வெற்றிக்கனியையே சுவைத்து வந்த இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து