எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரசார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது அவர்கள் குஷ்புவின் உருவ பொம்மையையும் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது சமூக வலைத் தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அவர் அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரசின் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.
ஆனால் சேரி என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள் நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நடிகை குஷ்பு மறுத்து விட்டார்.
ஆனால் காங்கிரசின் எஸ்.சி. துறையினர் குஷ்பு மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் நேற்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அந்த சாலையில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். நேற்று காலை 10 மணிக்கே அந்த சாலையில் காங்கிரசார் திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குஷ்புவின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
காங்கிரசின் மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சன்குமார் கூறியதாவது:-
இது எங்களின் முதற்கட்ட போராட்டம்தான். மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை(இன்று) அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி.துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம்.
அதன் பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக போராட்டத்தையொட்டி பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன் குஷ்பு வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், காங்கிரசார் மிகவும் அநாகரீகமாக நடந்துள்ளனர். குஷ்பு வழக்குகளை சட்டப்படி சந்திப்பார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.