எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமராவதி : சென்னை மக்களை கடும் அவதிக்குள்ளாக்கிய மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நேற்று மாலை தீவிரப் புயலாக கரையைக் கடந்தது.
வங்கக்கடல் கடந்த 27-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில், தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் தீவிர புயலாக நேற்று மாலை கரையை கடந்தது. தெற்கு ஆந்தி மாநிலம் நெல்லூர் அருகே மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையை மிரட்டி வந்த மிக்ஜம் புயல் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |