எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, அதிக டி-20 போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டதாக புதிய உலக சாதனையை படைத்துள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்.
இந்தியா வருகை...
இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
101 ஆட்டங்களுக்கு...
இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற உலக சாதனையை படைத்தார். இந்த போட்டியையும் சேர்த்து அவர் 101 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.
2-வது போட்டி...
முன்னதாக முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் 26 ரன்னிலும், ஷபாலி வர்மா 52 ரன்னிலும் (42 பந்து, 9 பவுண்டரி) அவுட்டாகினர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |