எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்டவுன் : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது. இதில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
5 முறை கோப்பை...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. இதுவரை இந்திய அணி 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றி 2-வது வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது.
6-வது முறை...
சமபலமிக்க இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி 6-வது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது ஆஸ்திரேலிய அணி 4-வது முறை கோப்பையை வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமபலத்துடன்...
உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் முஷீர் கான் 2 சதம் அடித்துள்ளார். பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றினர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர். அதுபோல் ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மோலியா ஆகிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
4-வது முறையாக...
ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.
2 முறை மோதி...
இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவு இல்லை. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |