எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மக்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெறலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தி.மு.க ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அடுத்த மாதம் 1 -ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதே போல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |