எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் நடிகை ஷோபனா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேரளாவில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இணையாக பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி 3-ம் தேதி கேரளாவின் திருச்சூரில் பா.ஜ.க. சார்பில் பிரம்மாண்ட மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதை தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி கடந்த ஜனவரி 17-ம் தேதி கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருப்ரயார் ராமசாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அதற்கு முன்பு ஜனவரி 16-ம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கடந்த ஜனவரி 27-ம் தேதி பாத யாத்திரையை தொடங்கினார். அவரது பாத யாத்திரை திருவனந்தபுரத்தில் நாளை நிறைவடைகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்த ஆண்டில் 3-வது முறையாக கேரளாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளாவின் 10 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
குறிப்பாக நடிகை ஷோபனா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி 3-ம் தேதி திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க. மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நடிகை ஷோபனாவும் பங்கேற்றார். அப்போதே அவர் பா.ஜ.க. வேட் பாளராக முன்னிறுத்தப் படுவது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக சசி தரூர் பதவி வகிக்கிறார். வரும் தேர்தலில் அவரே மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மனைவி நடிகை மேனகா ஆவார். இத்தம்பதிக்கு ரேவதி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் என இரு மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |