எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்ரான் : போலீசார் தாக்கியதில் மாஷா அமினி உயிரிழந்த விவகாரத்தில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரில் கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இசை மற்றும் பாடலில் சிறந்த விளங்குபவர்களுக்கு உலகின் உயரிய விருதான கிராமிய விருது வழங்கி கவுரவிக்கப்படும். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்த விழாவில் ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் கிராமிய விருது வென்றார். அவருக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் மாஷா அமினியின் உயிரிழப்பால் 2022-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக அவரது பாடல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவில் நீதிமன்றம் அவருக்கு 3.8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஈரான் அரசின் நடைமுறைக்கு எதிரான பிரசாரம் மற்றும் மக்கள் போராட்டத்தை ஊக்கப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் முறையான வருத்தம் தெரிவிக்காததால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகள் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் குற்றம் தொடர்பாக பாடல் உருவாக்க வேண்டும் எனவும், அவர்களின் குற்றம் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் அரசு ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டத்தை கொண்டு வந்தது. மாஷா அமினி என்ற பெண்மணி ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் கைது செய்தனர். போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில போராட்டம் வெடித்தது. இதற்கு ஆதரவாக பாடல் உருவாக்கியதால் பாடகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |