எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டி திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன்.
மேலும் திருச்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டால் தானே நடக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரைதான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடிதான்.
அவர் ஒரு விவசாயி. அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். அதனால் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும். ஜெயிப்பவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |