எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே நேற்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2020-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர். இவர்கள், தீர்த்தஹள்ளி பாதை எனக் குறிப்பிடப்படும் ஒரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு முகமைகள் நம்புகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.