எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கியூட் முதுகலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
2022- 23-ம் கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. கியூட் முதுகலை 2024 மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் தனிப்பட்ட கவுன்சிலிங் முடிவுகள் பல்கலைக்கழகங்களால் எடுக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான கியூட் முதுகலை தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை கணினி அடிப்படையிலான தேர்வாக (சி.பி.டி) இந்தியா மற்றும் வெளிநாடுகளில், 262 நகரங்களில் 572 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை எழுத 4.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இது முந்தைய ஆண்டு பதிவான, 4.5 லட்சத்தை காட்டிலும் சற்றே அதிகமாகும். மொத்தம் பதிவு செய்த 4 லட்சத்து 62 ஆயிரத்து 603 விண்ணப்பதாரர்களுக்காக, 7 லட்சத்து 68 ஆயிரத்து 414 தேர்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கியூட் 2024 முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் pgcuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். தேர்வு நடைபெற்ற 157 பாடங்களிலும் முதலிடம் பிடித்த மணவர்களின் விவரங்களும், அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |