Idhayam Matrimony

4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 

நாடு முழுவதும் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.  தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மராட்டியம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு தொகுதிகள் 4-வது கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. 

ஆந்திரபிரதேசத்தில் மே 13-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து