முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      உலகம்
Nawaz-Sharif 2023-09-10

இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் (வயது 74), ஐந்து நாள் பயணமாக சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் பேரன் ஜுனைத் சப்தார் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரும் உடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பயணம் தனிப்பட்ட பயணம் என்றும், இந்த பயணத்தின்போது நவாஸ் ஷெரீப்பிற்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகள் மரியம் நவாஸ் முதல்-மந்திரியாக இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கூட்டங்களை நவாஸ் நடத்த உள்ளதாகவும், சீன நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து பேச உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ காரணங்களுக்காக 2019ம் ஆண்டு  லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு திரும்பினார். அதன்பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக  சீனா சென்றுள்ளார். கடந்த காலங்களில் மருத்துவ காரணங்களுக்காக நவாஸ் ஷெரீப் சீனா சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து