எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில்...
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 16 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நம்ப முடியாததாக...
பெங்களூரு தரப்பில் வில் ஜேக்ஸ் 100 ரன், விராட் கோலி 70 ரன் எடுத்தனர். இந்நிலையில் 19வது ஓவரில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியை வில் ஜேக்ஸ் 16வது ஓவரிலேயே முடித்தது நம்ப முடியாததாக அமைந்ததாக விராட் கோலி கூறியுள்ளார். மேலும் தம்முடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுபவர்களுக்காக விளையாடவில்லை என்றும், அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் மட்டுமே விளையாடுவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் விராட் அளித்த பேட்டியில் கூறியதாவது,
எங்களுக்கு தெரியும்...
வில் ஜேக்ஸ் ஆரம்பத்தில் விரும்பிய வகையில் அதிரடியாக விளையாட முடியாததால் கடுப்பானார். அப்போது நாங்கள் கொஞ்சம் கலந்துரையாடினோம். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் அதிரடியாக விளையாடினார். அவரால் எந்தளவுக்கு அதிரடியாக விளையாட முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.
அற்புதமான முயற்சி...
குறிப்பாக மோகித் சர்மாவுக்கு எதிராக ஒரே ஓவரில் அவர் பெரிய ரன்கள் குவித்ததும் என்னுடைய வேலை மாறிவிட்டது. அவருடைய அதிரடியை நான் எதிர்ப்புறம் பார்த்ததில் மகிழ்ச்சி. இப்போட்டியை நாங்கள் 19வது ஓவரில் முடிப்போம் என்று நினைத்தேன். ஆனால் 16வது ஓவரிலேயே முடித்தது அற்புதமான முயற்சி. வில் ஜேக்ஸ் சிறந்த டி20 சதங்களில் ஒன்றை அடித்தார். அதை நான் எதிர்ப்புறம் இருந்து பார்த்ததில் மகிழ்ச்சி. என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்த வரை அணிக்காக போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தினந்தோறும்...
மக்கள் தங்களுடைய அனுமானங்களை தினந்தோறும் பேசலாம். கடந்த 2 போட்டிகளைப் போல் நாங்கள் ஆரம்பத்தில் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது விளையாடுவது போல் நாங்கள் தொடர விரும்புகிறோம். நாங்கள் எங்களுக்காகவும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |