எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இப்பகுதி மக்கள் அதிகமாக வசிக்கும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 213 தொடக்கப் பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 40 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உண்டு உறைவிடப் பள்ளிகள் என 298 பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் பல்லாண்டு காலமாக இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களுடைய நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுடனான விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றி தி.மு.க. அரசு 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தபோது, அதற்கு எதிர்ப்பு குரல் எழுந்தது. நானும் அறிக்கை விடுத்திருந்தேன். இருப்பினும், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போதே இதற்கு கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையோடு சேர்க்கப்படாது என்று தொடர்புடைய துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவு பெற்று உயர் நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்ற நிலையில், இந்தப் பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதல்வரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்: அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
12 Nov 2024சென்னை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
12 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
12 Nov 2024சென்னை : சென்னையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்
-
பெண்களின் திருமண வயதை 9-ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் : ஈராக்கில் விரைவில் அமல்படுத்த முடிவு
12 Nov 2024பாக்தாத் : பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் ஈராக்கில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
12 Nov 2024சென்னை : கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்
12 Nov 2024போர்ட் லூயிஸ் : மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக டாக்டர் நவீன் ராம்கூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியை கண்டு சிலர் வயிறு எரிகிறார்கள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
12 Nov 2024சென்னை : திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும்.
-
இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்
12 Nov 2024கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை 14-ம் தேதி நடைபெற உள்ளது.
-
டாஸ்மாக் தரப்பை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு : சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் உத்தரவு
12 Nov 2024சென்னை : மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான டாஸ்மாக்கின் சுற்றற
-
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
12 Nov 2024காசா சிட்டி : காசா முனை கான் யூனிஸ், நசிரத் அகதிகள் முகாம் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
-
மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
12 Nov 2024புதுடெல்லி : பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோ்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
12 Nov 2024நாகை : தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை, தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Nov 2024சென்னை, கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அர
-
ஜப்பான் பிரதமராக ஷெகெரு இஷிபா மீண்டும் தேர்வு
12 Nov 2024டோக்கியோ : ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தேர்வாகி உள்ளார்.
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை : தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
தங்கம் விலை ரூ. 1,080 குறைந்தது
12 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்று (நவ. 12) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து விற்பனையானது.
-
கங்குவா சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
12 Nov 2024சென்னை : கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்த ஐ.சி.சி. திட்டம்
12 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கி
-
ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு: மாவோயிஸ்டு ஆதிக்க பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டிச.31 மற்றும் ஜன.1-ல் குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Nov 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தே
-
ஆதார் - பான் கார்டு இணைப்புக்கு டிச.31-வரை மத்திய அரசு கெடு
12 Nov 2024புதுடெல்லி : ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ்: டிரம்ப்
12 Nov 2024புளோரிடா : அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததால் மகராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல்
12 Nov 2024மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ள
-
பதிவாளரிடம் ரூ. 1.60 கோடியை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது: ஐகோர்ட் உத்தரவு
12 Nov 2024சென்னை : ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது