Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் அரவணை தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை : தேவசம்போர்டு தகவல்

சனிக்கிழமை, 8 ஜூன் 2024      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 

:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சபரிமலையில் முக்கிய பண்டிகை காலமான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த ஆண்டு இந்த காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தற்போதே வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றன. 

பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான 19 மூலப்பொருட்களுக்கான டெண்டர் கோருவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் மாதம் தொடங்கி, அவற்றில் 16 பொருட்களின் ஏலம் தற்போது முடிவடைந்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர்  பிரசாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

ஏலக்காய்களில் அதிகபட்ச எச்ச அளவு (எம்.ஆர்.எல்.) அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டதையடுத்து, தேவசம் போர்டு அரவணா விற்பனை செய்யக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்தது. இதனால் வாரியத்துக்கு ரூ. 6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 

இது போன்ற நிதி இழப்பு மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க, தற்போது வன மேம்பாட்டு கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது. 

இதனை மகராஷ்டிராவை சேர்ந்த ஏஜென்சி ஒன்று கடந்த ஆண்டை விட குறைந்த விலையில் வழங்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து