முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்: தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
Pramalatha

சென்னை, மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி குறிப்பில், “தமிழ்‌ திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும்‌ அன்பான வேண்டுகோள்‌, கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின்‌ (ai technology) மூலம்‌ திரைப்படங்களில்‌ பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள்‌ வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள்‌ ஆடியோ வெளியீட்டு விழாவில்‌ வருகின்றது.

எங்களிடம்‌ முன்‌ அனுமதியில்லாமல்‌ இது மாதிரியான அறிவிப்புகள்‌ வருவதை தவிர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.எந்த விதத்தில்‌ பயன்படுத்துவதாக இருந்தாலும்‌ முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்‌. ஏஐ தொழில்நுட்பத்தின்‌ (ai technology) மூலம்‌ திரைப்படங்களில்‌ பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும்‌ எந்த அனுமதியும்‌ பெறவில்லை என்பதை நாங்கள்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌. எனவே அனுமதியில்லாமல்‌ பத்திரிகை செய்திகள்‌, ஊடக செய்திகள்‌, ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில்‌ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து