முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜே.பி.நட்டா கண்டனம்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      தமிழகம்
JP-Natta 2023-09-12

Source: provided

சென்னை : ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் கொதிப்படைய செய்துள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலை பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிகக் கொடூரமாக துண்டிக்கப்பட்டு விட்டது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மலிவான அரசியலை கைவிட்டு ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்கான நடவடிக்கையை திமுக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து