முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்மன் கிலின் விருப்பம்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடரில் புதிய கேப்டனாக செயல்பட இருக்கும் சுப்மன் கில் கேப்டன்சி பொறுப்பை ஏற்க்கப்போவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்று நானும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புகிறேன். அதே போன்று கேப்டனாக விளையாடும் போது எதிர்பார்ப்பும், அழுத்தமும் அதிகமாக இருக்கும். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களின் உயரத்தை எட்ட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும். அதே போன்று எனது இலக்கும் கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்பதுதான். ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக இருந்த போது ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். தற்போது இந்திய அணிக்கும் கேப்டனாக மாறியுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

________________________________________________________________________________

அரையிறுதியில் பிரியன்ஷூ

இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் கனடா ஓபனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கனடா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று நடந்தது. இதில், உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ரஜாவத், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனை எதிர்கொண்டார். இதில் ரஜாவத் 21-11, 17-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்றது. ரஜாவத் அரையிறுதியில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை எதிர்கொள்கிறார்.

________________________________________________________________________________

இங்கிலாந்தில் டெண்டுல்கர்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) - கேமரூன் நோரி (இங்கிலாந்து) விளையாடி வருகின்றனர். இந்த போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றுள்ளார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார்.

________________________________________________________________________________

ரியான் பராக்குக்கு தொப்பி

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.  முன்னதாக இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் அறிமுக வீரராக களம் இறங்கும் வீரர்களுக்கு அணியின் தொப்பி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரியான் பராக்கிற்கு அவரது தந்தை பராக் தாஸ் தொப்பியை அணிவித்தார். இந்திய அணியின் தொப்பியை மகனுக்கு அப்பாவே அணிவித்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து