முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண முகாம்களை பார்வையிட இன்று மணிப்பூர் செல்கிறார் ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024-05-12

Source: provided

 புத டெல்லி : பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோக்கள்,  வலைதளங்களில் ஜூலை மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது வன்முறை நீடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று  மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்த கே.மேகசந்திரா இது குறித்து கூறியதாவது,

டெல்லியில் இருந்து அசாமின் சில்சாருக்கு விமானம் மூலம் வந்தடையும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்து மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்கு பயணிப்பார். அவர் அங்குள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்ட பின்னர் மீண்டும் சில்சாருக்கு வந்து, அங்கிருந்து இம்பாலுக்கு விமானத்தில் பயணிக்க உள்ளார்.  இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் ராகுல் காந்தி, நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். 

தொடர்ந்து, அவர் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமக்களை பார்வையிட்ட பின்னர் இம்பாலில் மாநில கவர்னர் அனுசுயா உய்கேவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் இனமோதல் ஏற்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அங்கு இருமுறை பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து