முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் மத்திய அமைச்சர் கட்காரி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

பெங்களூரு:பெங்களூரு -- சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, வேலுார், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னைக்கு காரில் செல்வதற்கு 6 முதல் 7 மணி நேரமும், பஸ்சில் சென்றால் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். ரயிலில் சென்றால், 6 மணி நேரம் ஆகிறது.

இந்நிலையில், பெங்களூரு -- சென்னை நகரங்களை இணைக்கும் வகையில் 17,930 கோடி ரூபாய் செலவில் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2022-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டில் இருந்து துவங்கும் சாலை, கர்நாடகாவின் மாலுார், பங்கார்பேட்டை, தங்கவயல், பேத்தமங்களா, ஆந்திராவின் வெங்கடகிரி கோட்டா, பலமனேர், பங்காருபலேம், சித்துார்.தமிழகத்தின் ராணிபேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் வழியாக ஸ்ரீபெரும்புதுாரில் முடிகிறது.

மொத்த துாரம் 258 கி.மீ. ஆகும். இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இரு நகரங்களையும் இரண்டு மணி நேரத்தில் கடந்து விடலாம் என கருதப்படுகிறது. சாலைப் பணிகள், 2024 மார்ச்சில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில், பெங்களூரு -- சென்னை அதிவிரைவு சாலை பயன்பாட்டுக்கு வரும் என்றும், பிரதமர்  மோடி திறந்து வைப்பார் எனவும், மத்திய  அமைச்சர் நிதின் கட்காரி, பெங்களூரில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து