முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி வெற்றி; கூட்டணி அரசு அமைக்கிறது

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      உலகம்
France 2024-07-08

பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஐரோப்பாவில் நடைபெறும் முக்கிய தேர்தலாகும். நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேலின் மையவாத கூட்டணி, வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி, இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் பிரண்ட் கூட்டணி போட்டியிட்டன.

இந்நிலையில், இறுதி கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் இடதுசாரி முன்னணி கூட்டணி அதிக இடங்களில் (182 இடங்கள்) வெற்றி பெற்றுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செண்ட்ரிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்தில் (168 இடங்களில் வெற்றி) உள்ளது. வலதுசாரி கூட்டணி 3வது இடத்துக்கு (143 இடங்கள்) தள்ளப்பட்டுள்ளது. . குடியரசுக் கட்சி 45 இடங்களையும், மற்ற கட்சிகள் இணைந்து 39 இடங்களையும் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 289 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழலில், இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

இதனிடையே இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் இமானுவேல் மேக்ரானின் செண்ட்ரிஸ்ட் கட்சி புதிய கூட்டணி அரசை அமைக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியேல் அட்டல் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்பதை தொடர்ந்து அவர் இந்த முடிவை அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து