முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியா சென்றடைந்தார்: பிரதமர் நரேந்திரமோடிக்கு மாஸ்கோவில் வரவேற்பு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      உலகம்
Modi 2024-07-08

Source: provided

மாஸ்கோ : இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையத்தில், பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் தி கார்ல்டன் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நட்சத்திர விடுதி வாயிலிலும், இசைக் கருவிகள் இசைக்க பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதர அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு நேற்று (திங்கள்கிழமை) முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, ரஷிய அதிபர் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரஷியாவில் நடைபெறும் மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷியாவுக்கு செல்வதை உலக நாடுகள் அனைத்துமே மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றே ரஷியா கூறி வருகிறது.

ரஷியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆஸ்திரியா செல்லவிருக்கிறார் பிரதமர், அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெகமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தனது பயணத்தின்போது, ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து