முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு: ஈரானின் புதிய அதிபர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      உலகம்
Iran 2024-07-09

டெக்ரான், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா  அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார். 

ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள  சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் இஸ்ரேல் - காசா போரை முன்னிறுத்தி முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அருகாமையில் உள்ள  லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா  அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு ஈரானின் அரசு ஊடகம் மூலம் உறுதி தெரிவித்துள்ளார். 

மேலும் ஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 மேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களை நிறுத்த  ஹெஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் மசூத் தெரிவித்துள்ளார். 

1984-ல்  லெபனான் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டின் மீது இஸ்ரேல் படையெடுத்து கைப்பற்ற முயன்றது. இஸ்ரேல் படையெடுப்பை எதிர்க்க உருவான இயக்கமே ஹிஸ்புல்லா ஆகும். 

 கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஹாசன் நஸ்ரல்லா தலைமையில் லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. 

சமீபத்தில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா நடந்திய ஏவுகணைத் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் போர் தொடுத்துவரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து