முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Sanjay-Singh 2023-10-04

Source: provided

புதுடெல்லி : தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. எதிரானது என ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளர்.

இது குறித்து அவர் நிருபர்களிடம்  கூறியதாவது: 

அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யை பயன்படுத்தி எதிர்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியானது. பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு பா.ஜ.க. எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களை பா.ஜ.க. ஏன் இவ்வளவு வெறுக்கிறது? ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை அவர்கள் ஏன் விரும்பவில்லை?. பா.ஜ.க. வின் நோக்கம் தெளிவாக இருந்தால், ஓபிசி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி, இந்த மசோதாவை ஒரு முறை அல்ல ஆயிரம் முறை வேண்டுமானாலும் ஆதரிப்போம். மக்கள் தொகை அடிப்படையில் ஓ.பி.சி., இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த மசோதாவை எதிர்த்ததன் மூலம், பா.ஜ.க. வின் உண்மையான முகம் நாடு முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து