Idhayam Matrimony

திட்டமிட்டு மலையாள சினிமாவை அழிக்க முயற்சி : நடிகர் சுரேஷ் கோபி கருத்து

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2024      சினிமா
Suresh-Gopi 2024-08-27

Source: provided

திருவனந்தபுரம் : திட்டமிட்டு மலையாள சினிமாவை அழிக்க முயற்சி நடக்கிறது என்று நடிகரும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளை அளித்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன. 

நடிகர் சித்திக்கின் மேல் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னை ரூபம் எடுத்ததை தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர்.

இந்த நிலையில், நடிகரும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ்கோபியிடம் இப்பிரச்னைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ ஹேமா கமிஷன் மூலம் ஊடகங்களுக்கு தீனி கிடைத்துள்ளது. நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? யார் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ஊடகங்கள் அல்ல. நீங்கள் (ஊடகங்கள்) யுத்தத்தை உருவாக்கி ரத்தத்தை குடிக்கிறீர்கள். இதை கையிலெடுத்து பலரும் சம்பாதிக்கின்றனர். திட்டமிட்டு மலையாள சினிமாவை அழிக்க முயற்சிக்கின்றனர். என ஆவேசமாக தன் கருத்துகளை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து