முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்துக்கே சீனா பிரச்னையாக உள்ளது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

புதுடெல்லி : இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சீனா பிரச்னையாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில்  நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: 

பல வழிகளில் சீனா பிரச்னையாக உள்ளது. அந்நாட்டின் தனித்துவமான அரசியல், பொருளாதாரமே இதற்கு காரணம். அதன் தனித்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், அங்கிருந்து வரும் தீர்வுகள், முடிவுகள் அனைத்தும் சிக்கலானதாக இருக்கும். 

வர்த்தகத்தில் சீனா அனுபவித்த நன்மைகளை கவனத்தில் கொள்ளாததால் பலர் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை பற்றி புகார் செய்கிறார்கள்.  சீனாவை பற்றி நாம் மட்டும் விவாதிக்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு என அனைத்திலும் சீனாவை பற்றி மட்டுமே விவாதிக்கின்றனர். 

அந்நாட்டுடன் அமெரிக்கா பல வழிகளில் மோதி வருகிறது. எனவே, உண்மையில் இந்தியாவுக்கு மட்டும் சீனா பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும், உலகிற்கும் சீனா ஒரு பிரச்னையாக உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து