முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் வென்றால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை: டிரம்ப்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      உலகம்
Trump 2024-08-31

Source: provided

வாஷிங்டன் : நான் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப்  வாக்குறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். 

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், 

அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார். 

மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து