முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹேமா குழு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் : நடிகர் மோகன்லால் பேட்டி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      சினிமா
Mohanlal 2024 08 18

Source: provided

திருவனந்தபுரம் : ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று நடிகர் நடிகர் மோகன்லால் தெரிவித்தார். 

இது தொடர்பாக மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் மோகன்லால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான். மலையாள நடிகர் சங்கமான அம்மாதான் சிறந்த திரைப்பட நடிகர் சங்கமாக செயல்பட்டது. நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து கூண்டோடு ராஜினாமா என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். 

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்கேதான் இருக்கிறேன். அம்மா திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்காக பல நல்ல பணிகளை செய்துள்ளோம். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் ஹேமா கமிட்டியிடம் எனது வாக்குமூலத்தை அளித்துள்ளேன். குற்றவாளிகள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், அதுவே காவல்துறையின் கடமை.

பாலியல் குற்றச்சாட்டுகளால் அம்மா என்ற மொத்த திரைப்பட நடிகர்கள் சங்கம் சிதறிவிடக் கூடாது.   ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையில் தெரிவித்த புகார்கள் நடந்திருக்கலாம். ஹேமா குழு அறிக்கையில் உள்ள புகார்களின் அடிப்படையில் அம்மா சங்கத்தை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.  

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் உள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் குறித்து விசாரிக்க அரசு குழு அமைத்துள்ளது.

இதில் தனிப்பட்ட முறையில் நான் செய்ய எதுவுமில்லை. பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் முழுமையாக என்ன இருக்கிறது என்று தெரியாது. எனக்கு தெரிந்ததை வைத்தே பேசியுள்ளேன். இவ்வாறு மோகன்லால் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து